அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவது வழக்கம்.. அதுக்கு என்ன காரணம் என்னவென்று தெரிஞ்சுக்கிட்டு செய்தால் கூடுதல் பலனை தரும்.
அசோகவனத்தில் இருந்த சீதையை அனுமன் கண்டபோது அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொள்ள சென்றாள். அவளை தடுத்து, தன்னை இன்னாரென அடையாளப்படுத்தி, ராமனின் கணையாழியை தந்து, ராமன் விரைவில் வந்து சீதையை சிறை மீட்பாரென கூறி, ராமனை சமாதானப்படுத்த, சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்டு அனுமன் கிளம்பும்போது, அருகிலிருந்த வெற்றிலை செடியிலிருந்து ஒரு வெற்றிலையை பறித்து, அனுமனின் தலைமீது வைத்து, சிரஞ்சீவியாய் இருப்பாய் என சீதை ஆசீர்வதித்தாள். அதனாலாயே நினைத்த காரியம், தடையில்லாமல் நடக்க, வெற்றிலை மாலை சாற்றுவதை பக்தர்கள் வழக்கமாய் கொண்டிருக்கின்றனர் .