எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
மகோற்கடர்என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான். உடனே விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற தேங்காய்களை எடுத்து வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.
விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.
அதன்மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.
அன்றிலிருந்தே சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவானது.
சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!
By Staff
Published: