சுவையான சுறா மீன் குழம்பு!!

By Staff

Published:

6fde6ac0d318e7b98cb891c1b3557d8d

கடல் மீன் வகைகளில் பாலூட்டும் தாய்மார்களுக்காக கேட்டு வாங்கிச் சென்று சமைக்கும் மீன் வகை என்றால் அது சுறா மீனாகும். இப்போது நாம் சுறா மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
சுறா மீன் – 500 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி -2
பச்சை மிளகாய்- 3
பூண்டு –   10 பல்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்   – 1 ஸ்பூன்
கடுகு   – 1  ஸ்பூன்
கறிவேப்பிலை  – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு

செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை  போட்டு தாளித்து,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு  வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து இதனுடன் புளித் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கணவாய் மீனைப் போட்டு வேகவிடவும்.
5. எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் சுறா மீன் குழம்பு  ரெடி
 

 

Leave a Comment