மொறுமொறு சுரைக்காய் வடை!!

தேவையானவை: சுரைக்காய்- ½ கிலோ பாசிப்பருப்பு- கால் கிலோ பச்சை மிளகாய்- 3 கறிவேப்பிலை- கைப்பிடியளவு வெங்காயம்- 2 அரிசி மாவு- 2 ஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு செய்முறை:…

6bd2f93d660ecdcb5c58eb324c077c29

தேவையானவை:
சுரைக்காய்- ½ கிலோ
பாசிப்பருப்பு- கால் கிலோ
பச்சை மிளகாய்- 3
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
வெங்காயம்- 2
அரிசி மாவு- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:
1.    பாசிப்பருப்பினை 4 மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து சுரைக்காயினைத் துருவிக் கொள்ளவும்.
3.    அதன்பின்னர் அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய சுரைக்காய், அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4.    அடுத்து வடைகளாகத் தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுரைக்காய் வடை ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன