கோவக்காயின் நன்மை தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!

By Staff

Published:

814299ebc37e0c1bc13f93563d32b1a7

கோவைக்காயினை பொரியலாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம். கோவைக்காய் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

மேலும் கோவக்காயினை டயட் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது குறையும். 

மேலும் செரிமானப் பிரச்சினை இருப்பவர்கள் கோவைக்காயில் ஜூஸ் செய்து குடித்தால் பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு குடைக்கும்.

வாய்ப்புண், குடல் புண் இருந்தால் கோவைக்காய் ஜூஸினை கட்டாயம் குடித்துவர வேண்டும்.

மேலும் குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள், தேவையில்லாத நச்சுக்கள் இருப்பின் அவை அனைத்தையும் வெளியேறிவிடும்.

மேலும் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகளான சிறுநீர்க் கடுப்பு, சிறுநீரில் கல் இருத்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக உள்ளது.

மேலும் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து கோவக்காயினை எடுத்துவந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

கோவைக்காய் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்து, நரம்பு மண்டலத்தை சீராகச் செயல்பட வைக்கின்றது.

Leave a Comment