தேவையானவை:
கோதுமை மாவு- 100 கிராம்,
சர்க்கரை – கால் கிலோ,
நெய் – 250 மில்லி,
ஏலக்காய்த்தூள் – ½ ஸ்பூன்,
முந்திரி- 5,
செய்முறை:
1. கோதுமை மாவுடன் நீர் சேர்த்து வடிகட்டி கொண்டு பால் பிழிந்து கொள்ளவும்.
2. அதிகபட்சமாக 4 முறை வரை செய்யவும். அடுத்து வாணலியில் நெய் ஊற்றி முந்திரியைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் சர்க்கரை, கோதுமைப்பால், நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
4. நெய் பிரியும்போது ஏலக்காய்த் தூள், முந்திரி சேர்த்து இறக்கினால் கோதுமை அல்வா ரெடி.