இட்லி மற்றும் தோசைக்கு செமயான காம்பினேஷனான தக்காளி சட்னி ரெசிப்பியினை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையானவை:
தக்காளி – 4
வெங்காயம்-2
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு- ½ ஸ்பூன்
உளுந்து- ½ ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் வதக்கிய கலவையைப் போட்டு புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த தக்காளி கலவையில் கலந்து இறக்கினால் தக்காளி சட்னி ரெடி.