கெட்ட கொழுப்பினைக் குறைக்கும் ஆரா மீன் குழம்பு ரெசிப்பி!!

By Staff

Published:

369f4749ae9d0176976dd1addb068805

ஆரா மீன் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
ஆரா மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி – 1/4 கிலோ 
புளி – எலுமிச்சை அளவு 
தனியா தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
கடுகு – 1 ஸ்பூன் 
வெந்தயம்- 1/4 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை– தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். 
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3.    தனியா தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
5.    குழம்பு கொதித்த பின்னர், கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால் ஆரா மீன் குழம்பு ரெடி.

Leave a Comment