சுவை நிறைந்த வாழைப் பூ பொடிமாஸ் ரெசிப்பி!!

By Staff

Published:

84863db3886cd5d00112f22b4a98b8fa

பொதுவாக நாம் பொடிமாஸ் என்றால் சிக்கன், மட்டன் போன்றவற்றில்தான் செய்வோம். இப்போது மிகவும் சுவையான வாழைப் பூ பொடிமாஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப் பூ -1
சின்ன வெங்காயம் – 8
பச்சை மிளகாய் – 2
சீரகம் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு, 
மஞ்சள் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :
1.    வாழைப் பூவின் நரம்பினை நீக்கி மோரில் போட்டு ஊறவைத்து கொத்துக்கறிக்கு நறுக்குவதுபோல் மைய நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.
3.    அடுத்து வாழைப்பூ, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி போட்டு மூடி வைத்துவிடவும்.
4.    அடுத்து  வாழைப் பூ வெந்ததும் கறிவேப்பிலையினைத் தூவி இறக்கினால் வாழைப் பூ பொடிமாஸ் ரெடி.

Leave a Comment