ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சப்பாத்தி!!

By Staff

Published:

540963de4673c5d4d818486e82f87741

வாழைப்பூ அதிகளவு நார்ச் சத்துக்களைக் கொண்டதாக உள்ளது. இதனால் டயட் இருப்பவர்கள் நிச்சயம் வாழைப்பூவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இப்போது வாழைப் பூவில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கோதுமை மாவு – 3 டம்ளர் 
பாசிப்பருப்பு – 5 ஸ்பூன்
வாழைப்பூ – 1
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. வாழைப்பூவில் உள்ள நரம்பினை நீக்கி மோரில் போட்டு ஊறவைத்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் பாசிப்பருப்பபுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து அரைத்த கலவையை வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு, தயிர், உப்பு போன்றவற்றுடன் கலந்து தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் பிரிட்ஜில் ஊறவைத்து சப்பாத்திக் கல்லில் போட்டு தேய்த்து எடுத்து தோசைக் கல்லில் போட்டு எடுத்தால் வாழைப்பூ சப்பாத்தி ரெடி.

Leave a Comment