கோவா ஸ்டைலில் குழந்தைகளைக் கவரச் செய்யும் சிக்கன் சில்லி ரெசிப்பி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.
தேவையானவை:
சிக்கன் – 250 கிராம்
புதினா – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
இஞ்சி – 1
பூண்டு -1
பச்சை மிளகாய் – 4
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. மிக்சியில் புதினா, கொத்தமல்லி, பச்சை.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சிக்கன், அரைத்த கலவை, கான்பிளவர் மாவு, மிளகுத் தூள், தயிர், உப்பு சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால் கிரீன் சிக்கன் வறுவல் ரெடி.