அசைவப் பிரியர்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இப்போது நாம் க்ரீன் சிக்கன் வறுவல் என்னும் கோவா ஸ்டைல் ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 1
வெங்காயம் – 2
கான்பிளவர் மாவு- கால் கப்
தக்காளி- 2
புதினா இலை – 1 கட்டு
கொத்தமல்லி இலை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய்- 2
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மிக்சியில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இழை, புதினா இலை, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து அரைத்த கலவையினுள் சிக்கனைப் போட்டு கான்பிளவர் மாவு, உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவிட்டு பின்னர் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தக்காளியைப் போட்டு வதக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கினால் க்ரீன் சிக்கன் வறுவல் ரெடி.