டேஸ்ட்டியான வால்நட் அல்வா ரெசிப்பி!!

By Staff

Published:

e00506bded18a7d4c70353ee43408dd5

வால்நட் உடலில் நல்ல கொழுப்பினை அதிகரித்து கெட்ட கொழுப்பினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய வால்நட்டில் தித்திப்பான அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வால்நட் : 150 கிராம்
சர்க்கரை : 100 கிராம்
நெய் : 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் : 1 ஸ்பூன்
பாதாம்- 5
பால்- கால் டம்ளர்
குங்குமப் பூ- 3

செய்முறை:
1.    வால்நட்டை பாலில் 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். பாதாமை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.     அடுத்து வாணலியில் நெய்விட்டு அரைத்த வால்நட்டுக் கலவையைப் போட்டு வதக்கவும்.
3.    அடுத்து பாலைச் சேர்த்து நெய் அவ்வப்போது ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
4.    நெய் பிரிந்து வரும்போது சர்க்கரை சேர்த்து ஏலக்காய்த் தூள் தூவவும்.
5.    அடுத்து இறுதியாக குங்குமப் பூ இதழ்கள் மற்றும் பாதாம் தூவி இறக்கினால் வால்நட் அல்வா ரெடி.
 

Leave a Comment