மாங்காய் என்றாலே நம் நாவில் எச்சில் ஊறும். இத்தகைய மாங்காயில் நாம் இப்போது சாதம் செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் வாங்க.
தேவையானவை:
மாங்காய் – 1
சாதம் – 100 கிராம்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. இஞ்சி மற்றும் மாங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள், மாங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. இந்தக் கலவையில் சாதத்தினைப் போட்டு கிளறி இறக்கினால் மாங்காய் சாதம் ரெடி.