சுவை நிறைந்த மாங்காய் குழம்பு!!

By Staff

Published:

60ea1ec19453df055d2f4f792f1e414f

மாங்காய் குழம்பு அதிக அளவில் கிராமத்தில் செய்யப்படும் குழம்பு வகையாகும். இதனை ஒருமுறை சாப்பிட்டால் நிச்சயம் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டச் செய்யும். 

தேவையானவை: 
மாங்காய் – 1 
வெங்காயம் – 2 
சீரகம் – 1/2 ஸ்பூன் 
தனியாத் தூள் – 1 ஸ்பூன் 
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் 
பூண்டு – 1
இஞ்சி – ½ துண்டு
கடுகு- ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மாங்காயை வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தினை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மாங்காயைப் போட்டு வதக்கி, தனியாத் தூள், மிளகாய்த் தூள் மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும்.
4.    எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் மாங்காய் குழம்பு ரெடி. 
 

Leave a Comment