மாங்காயில் செய்யப்படும் வற்றல் குழம்பானது அனைவராலும் பெரிய அளவில் விரும்பி உண்ணப்படும் குழம்பு வகையாக உள்ளது. இப்போது நாம் மாங்காயில் வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மாங்காய் வற்றல் – 5
கடுகு- ½ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்,
பூண்டு- 5 பல்
கடலைப் பருப்பு- ½ ஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர்ஊற்றி கொதிக்கவிட்டு அதில் மாங்காய் வற்றலைப் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். புளியை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
4. அடுத்து மாங்காய் வற்றல், அரைத்த பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு கிளறவும்.
5. அடுத்து புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் மாங்காய் வற்றல் குழம்பு ரெடி.