ஹோட்டல் ஸ்டைலில் இப்போது நாம் மட்டனில் குடல் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
மட்டன் குடல் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் – 4 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 1
பட்டை – 2,
கிராம்பு – 2,
சோம்பு – 2,
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு,
செய்முறை :
1. மட்டன் குடலை சிறிது சிறிதாக நறுக்கி மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்து பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டன் குடல், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
4. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, மட்டன் குடல் சேர்த்து கொதிக்கவிடவும்.
5. அடுத்து தேங்காய்ப் பால் , கொத்தமல்லி இழை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் மட்டன் குடல் குழம்பு ரெடி.