டேஸ்ட்டியான மட்டன் குடல் மிளகு வறுவல்!!

By Staff

Published:

9d61e2387f895d393d77572e23324bd9

மட்டன் குடலில் பொதுவாக நாம் குழம்புதான் செய்வோம். ஆனால் இன்று மிகவும் சுவையாக மட்டனில் குடல் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
மட்டன் குடல்- 1/2 கிலோ 
மிளகு – 2 ஸ்பூன் 
மிளகுத் தூள் – 3 ஸ்பூன் 
பச்சை மிளகாய் – 3 
கறிவேப்பிலை – தேவையான அளவு 
வெங்காயம் – 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் 
இஞ்சி- 1 துண்டு
எண்ணெய் – தேவையான அளவு 
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு 

 
செய்முறை: 
 
1.    மட்டன் குடலை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி நன்கு நறுக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி குக்கரிப் போட்டு மட்டன் குடல் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும்.
2.    அடுத்து  ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் குடல், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். 
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 
4.    அடுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி, ஊறவைத்த மட்டன் குடல், மிளகு சேர்த்து தண்ணீர் தெளித்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
5.    அடுத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் மட்டன் குடல் மிளகு வறுவல் ரெடி.
 

Leave a Comment