முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது. இப்போது மசாலா முந்திரி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முந்திரி – 100 கிராம்
நெய் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – ¼ ஸ்பூன்
மல்லித்தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அத்துடன் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மசாலா முந்திரி ரெடி