குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் ஒரு ரெசிப்பிதான் முந்திரி பக்கோடா. இந்த முந்திரியில் இப்போது பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முந்திரி- 2 கப்
கடலை மாவு – 100கிராம்,
அரிசி மாவு – 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு,
சமையல் சோடா- ¼ ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
1. பச்சை மிளகாய், கறிவேப்பிலையினை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
3. அடுத்து இந்தக் கலவையை பிரிட்ஜில் வைத்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மாவினை உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு எடுத்தால் முந்திரி பக்கோடா ரெடி.