இட்லி வகைகளில் பல வகைகள் உண்டு மசாலா இட்லி, பொடி இட்லி, சிக்கன் இட்லி. இவற்றில் இப்போது நாம் பொடி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
இட்லி- 5
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து- ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
இட்லி பொடி – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
1. இட்லியினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் இட்லி பொடி மற்றும் இட்லி சேர்த்துக் குலுக்கவும்.
4. அடுத்து நெய் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் பொடி இட்லி ரெடி.