கோதுமை மாவில் நாம் சர்க்கரை நோயாளிகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான உப்புமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கோதுமை ரவை – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் கோதுமை ரவையைப் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சியை லேசாக நசுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
4. அடுத்து கோதுமை ரவையை சேர்த்து கிளறி இறக்கினால் கோதுமை உப்புமா ரெடி.