சுவையான பிரட் உப்புமா ரெசிப்பி!!

By Staff

Published:

f939d22c0fd2328b8f908b7c58e21e5d-3

பிரட்டில் பொதுவாக நாம் பொரியல் ரெசிப்பிதான் செய்வோம். இப்போது நாம் சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பிரட்                    –        10 
கடுகு                 –        1 ஸ்பூன்
சீரகம்                –        1/2 ஸ்பூன்
வெங்காயம்           –        1
பச்சை மிளகாய்       –        1
தக்காளி              –        2
மஞ்சள் தூள்          –        1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்        –       1/4 ஸ்பூன்
பெருங்காயம்         –        சிறிதளவு
மல்லித் தழை        –       1 ஸ்பூன்
இஞ்சி- பூண்டு பேஸ்ட்           –        சிறிதளவு
கறிவேப்பிலை       –        தேவையான அளவு
எண்ணெய்            –        தேவையான அளவு
உப்பு                 –        தேவையான அளவு
செய்முறை

1.    பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியினை நறுக்கிக் கொள்ளவும்.
2.    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை வதக்கிக் கொள்ளவும்.
3.    அடுத்து இஞ்சி பூண்டினைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
4.    அடுத்து பிரட் துண்டுகளை போட்டு வேகவிட்டு கொத்த மல்லி இலை சேர்த்து இறக்கினால் பிரட் உப்புமா ரெடி.
 

Leave a Comment