பொதுவாக மாலை நேரங்களில் நாம் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிடுவோம். இப்போது நாம் வித்தியாசமாக பிரெட்டில் சீஸ் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 3
கேரட் – 1
சீஸ் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
பிரட் – 10
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை பேஸ்ட்போல் அரைத்துக் கொள்ளவும். சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, சீஸ், பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகுத் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு நீரில் நனைத்து பிழியவும். அதன் பின்னர் செய்து வைத்த கலவையை உருட்டவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சீஸ் பிரட் போண்டா ரெடி.