உருளைக்கிழங்கில் பொதுவாக நாம் பொரியல் அல்லது வறுவல் ரெசிப்பியினையே செய்து சாப்பிட்டு இருப்போம், அந்தவகையில் இப்போது உருளைக் கிழங்கில் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
உருளைக்கிழங்கு – அரை கிலோ
இஞ்சி – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 4
உளுந்து – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் உரித்து கைகளால் உதிர்த்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். இதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து இஞ்சி, அரைத்த பொடி சேர்த்துக் கிளறவும்.
5. இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.