நாவில் எச்சில் ஊறவைக்கும் மட்டன் கொத்துக் கறி!!

By Staff

Published:

c316aec7b5bd030cd7e2465092b2b5be

மட்டனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான கொத்துக் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மட்டன் – ½ கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை : 
1.    குக்கரில் மட்டன், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 15 விசில் விட்டு இறக்கவும். 
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து மட்டன், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் கரண்டியால் கொத்தி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் மட்டன் கொத்து கறி ரெடி.
•    

Leave a Comment