டேஸ்ட்டியான சிக்கன் ஊறுகாய் செய்யலாமா?

By Staff

Published:

11a3d0cc769f6dcba6b48bcfa7ca49d7

பொதுவாக ஊறுகாய் என்றால் நாம் எலுமிச்சை, மாங்காய் போன்றவற்றிலே தான் செய்வோம். அந்த வகையில் இப்போது சிக்கனில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சிக்கன் – 1 கிலோ
மிளகாய்த் தூள் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 ஸ்பூன்
எலுமிச்சை- 1
கடுகு – 2 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன் 
வெந்தயம் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 1
கறிவேப்பிலை – கைப்பிடியளவு

செய்முறை
1.    சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கனைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய்விடாமல் கடுகு, சீரகம், வெந்தயம் இவை மூன்றையும் போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
4.     அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
5.    அடுத்து இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
6.    அடுத்து மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த பொடி, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கி, சிக்கனைப் போட்டு வேகவிட்டு எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கினால் சிக்கன் ஊறுகாய் ரெடி.

Leave a Comment