டேஸ்ட்டியான பன்னீர் கிரேவி ரெசிப்பி!!

By Staff

Published:

df32a6f7d6c28169417def83068edd68-1

பன்னீர் அதிக அளவிலான கால்சியம் சத்தினைக் கொண்டதாக உள்ளதால் பல் மற்றும் எலும்பினை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இத்தகைய பன்னீரில் இப்போது கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
பன்னீர் – 250 கிராம்
குடைமிளகாய் – 2
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1 
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் 
கரம் மசாலா – 1 ஸ்பூன் 
மல்லித் தூள் – 1/2 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் 
எண்ணெய் – தேவையான அளவு 
கொத்தமல்லி – தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 
1.    தக்காளியை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். 
3.    அடுத்து வாணலியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு, குடைமிளகாய், தண்ணீர் ஊற்றி வேக விடவும். 
5.    அடுத்து பன்னீர் துண்டுகளைப் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் கிரேவி ரெடி.
 

Leave a Comment