குழந்தைகள் ஏதாவது இனிப்பு வேண்டும் என்று கேட்டால், மிகவும் எளிதாக ஜாங்கிரியினை நீங்கள் செய்து கொடுத்து அசத்தலாம். நிச்சயம் குழந்தைகள் அதனை விரும்பிச் சாப்பிடுவர்.
தேவையானவை:
உளுந்து – 1 கப்
சர்க்கரை – 3 கப்
கேசரி பவுடர் – 1 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் கேசரி பவுடர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
2. அடுத்து பாலித்தின் கவரினை கோன் போல் உருட்டி நுனியில் வெட்டி மாவுக் கலவையை வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வட்டமாகப் பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. இந்த பாகுக் கலவையில் ஜாங்கிரியைப் போட்டு 15 நிமிடம் ஊறவிட்டு எடுத்தால் ஜாங்கிரி ரெடி.
சுவையான ஜாங்கிரி ரெசிப்பி!!
By Staff
Published: