சுவையான பன்னீர் 65 ரெசிப்பி!!

By Staff

Published:

d9d095374a72f0edd46b23607357bd78

பன்னீரில் சுவையான 65 ரெசிப்பி செய்வது எப்படி என்று நாம் இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

பன்னீர் – 250 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு – 2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

1.  ஒரு பாத்திரத்தில் பன்னீர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து 3 மணி நேரம் பிரிட்ஜில் ஊற வைக்கவும். 
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த பன்னீர் கலவையுடன் கார்ன்ஃப்ளார்  மாவைச் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கி பன்னீர் மற்றும் கறிவேப்பிலையை தூவி இறக்கினால் டேஸ்ட்டியான பன்னீர் 65 ரெடி.

 

Leave a Comment