துளசி இலை சளி, நாள்பட்ட இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இத்தகைய துளசியில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
துளசி இலை- கைப்பிடியளவு
ஏலக்காய்- 4
சுக்கு- ½
தேன்- 2 ஸ்பூன்
பால்- கால் கப்
செய்முறை:
1. துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு மூன்றையும் மிக்சியில் போட்டு நசுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் 2 டம்ளர் அளவில் ஊற்றி நசுக்கிய கலவையைப் போட்டு கொதிக்கவிடவும்.
3. அதன்பின்னர் இந்த டீயை வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் பால் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி.