போளி வகைகளில் தேங்காய் போளி, காரப்போளி, கருப்பட்டி போளி என பல வகைகள் இருந்தாலும், அதிகம் பேர் வீடுகளில் செய்யப்படுவது என்னவோ கடலைப்பருப்பு போளிதான். இத்தகைய கடலைப்பருப்பு போளியினை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
மைதா மாவு- 2 கப்
கடலைப் பருப்பு- கால் கிலோ
வெல்லம் – 1 கப்
ஏலக்காய்த் தூள் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
2. கடலைப்பருப்பினை 3 மணி நேரம் ஊறவிட்டு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி மத்தால் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தினைப் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெல்லப்பாகுடன் கடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஆறவிட்டு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
4. அடுத்து மைதா மாவின் நடுவே இந்த உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மடித்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு எடுத்தால் கடலைப் பருப்பு போளி ரெடி.