இடுப்பெலும்பினை வலுவாக்கும் கருப்பு உளுந்து லட்டு!!

By Staff

Published:

c0b948181a0e4601a47dda72340e6283

30 வயதினைத் தாண்டும் போது நமது உடலின் இடுப்பெலும்புகள் வலுவிழந்து காணப்படும். இத்தகைய எலும்பினை வலுப்படுத்த வேண்டுமெனில் கருப்பு உளுந்தினை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது கருப்பு உளுந்தில் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கருப்பு உளுந்து – 200 கிராம்,
வெல்லம் – 150 கிராம்,
நெய் – 20 மில்லி,

செய்முறை :
1.    வாணலியில் உளுந்தைப் போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும். 
2.    அடுத்து வெல்லத்தை உடைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
3.    இந்த வெல்லப்பாகில் உளுந்துமாவைப் போட்டு கிளறி நெய்யை உருக்கி ஊற்றி இறக்கி ஆறவிடவும்.
4.    ஓரளவு லேசான சூட்டில் உருண்டைகளைப் பிடித்தால் கருப்பு உளுந்து லட்டு ரெடி.
 

Leave a Comment