பொதுவாக போளி என்றாலே நமக்கு இனிப்பு போளிகள் தான் ஞாபகத்திற்கு வரும், இப்போது நாம் உருளைக் கிழங்கில் போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உருளைக்கிழங்கு – அரை கிலோ
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
மைதா மாவு – 2 கப்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பில்லை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுந்து போட்டு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
3. அடுத்து உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறவும்.
4. அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5. அடுத்து பூர்ணக் கலவையை உருண்டைகளாக உருட்டி உருட்டி மாதா மாவின் நடுவே வைத்து நான்கு புறமும் மடித்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுத்தால் உருளைக் கிழங்கு போளி ரெடி.