குழந்தைகளுக்குப் பிடித்தமான ஓட்ஸ் லட்டு!!

By Staff

Published:

8348487559a2947721dce9c99bdaf4d6-1

பொதுவாக லட்டு என்றால் நாம் பூந்தியில்தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் வித்தியாசமாக ஓட்ஸில் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ஓட்ஸ் – கால் கிலோ
சர்க்கரை  – 100 கிராம்
முந்திரி – 10
நெய் – 4 ஸ்பூன்
செய்முறை :

1. வாணலியில் ஓட்ஸ் மற்றும் முந்திரியினை லேசாக வறுத்துக் கொள்ளவும்.                                                                
2. அடுத்து இதனை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். 
3. அதேபோல் சர்க்கரையை நைசாக மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
4. அடுத்து ஓட்ஸ் முந்திரி, சர்க்கரை, நெய் சேர்த்து சுடு தண்ணீர்விட்டு 
லட்டுபோல் உருண்டைகளாக பிடித்தால் ஓட்ஸ் லட்டு ரெடி.     

 

Leave a Comment