டேஸ்ட்டியான வாழைப்பூ மசாலா குழம்பு!!

By Staff

Published:

f53c707928209a1e671580ff6ee08986

வாழைப்பூவில் நாம் இப்போது மசாலா வகைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ- 1 
சின்ன வெங்காயம் – 12
தக்காளி- 2
புளி- எலுமிச்சை அளவு
தேங்காய் – கால் மூடி
கடுகு- ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை;
1.வாழைப்பூவில் உள்ள நரம்பினை நீக்கி அதனை நறுக்கி மோரில் போட்டு ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும். தேங்காயில் இருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். அடுத்து வாழைப்பூவைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
3. வாழைப்பூ வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி, அடுத்து மிளகாய்த் தூள் போட்டு மூடி வைத்துவிடவும்.
4. குழம்பு கொதிக்கும்போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கினால் வாழைப்பூ மசாலா குழம்பு ரெடி.

Leave a Comment