ஜவ்வரிசியானது அதிக அளவில் கார்போஹைட்ரேட், புரதச் சத்துகளைக் கொண்டதாகவும், எலும்புகளினை வலுவாக்குவதாகவும் உள்ளது. இப்போது நாம் ஜவ்வரிசியில் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி – 1
ரவை – 1/2 கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தயிர் – கால் கப்,
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை- தேவையான அளவு,
கொத்தமல்லி- தேவையான அளவு,
புதினா – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஜவ்வரிசியை 3 மணி நேரம் புளித்த தயிரில் ஊறவிடவும்.
3. அடுத்து ஜவ்வரிசியை வடிகட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவினைப் போண்டாவாக உருட்டிப் போட்டு பொரித்து எடுத்தால்
ஜவ்வரிசி போண்டா ரெடி.