வெந்தயக் கீரையினை கூட்டாக செய்து சாப்பிட்டு சலிப்படைந்து இருந்தால், இப்போது நாம் வெந்தயக்கீரையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
வெந்தயக் கீரை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 10
தக்காளி- 2
பூண்டு – 1 முழுதாக
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – ¼ துண்டு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து- ¼ ஸ்பூன்
செய்முறை :
1. வெந்தயக் கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயம், தக்காளியினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் வெந்தயக் கீரை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் வெந்தயக்கீரை குழம்பு ரெடி.