தித்திப்பான தர்பூசணி அல்வா ரெசிப்பி!

By Staff

Published:

bd0db3a995fa7f9dad7fd4b35e4714bc

தர்பூசணியில் பொதுவாக நாம் ஜூஸ் குடிக்கவே செய்வோம். இப்போது நாம் தர்பூசணியில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம் – 1
வெல்லம் – 500 கிராம்
தேங்காய் – அரை மூடி
நெய் – 50 கிராம்,
முந்திரி – 10
பாதாம்- 10
ஏலக்காய்த் தூள் – தேவையான அளவு
கலர் பவுடர்- சிறிதளவு

செய்முறை:

1. தர்பூசணியினை விதைகளை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடியாக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மிக்சியில் தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து பால் பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி பாகு காய்ச்சவும். அடுத்து அரைத்த தர்பூசணி, தேங்காய்ப்பால், கலர் பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.
4. அடுத்து நெய் ஊற்றி கைவிடாமல் கிளறி ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கினால் தர்பூசணி அல்வா ரெடி.

 

Leave a Comment