சுவை நிறைந்த பப்பாளிக்காய் பொரியல்!!

By Staff

Published:

81022cff491e4818bad2c45d99170531-1

பப்பாளிப் பழம் கண்பார்வைத் திறனை மேம்படுத்துவதாக உள்ளது. மேலும் பப்பாளிப் பழத்தில் இப்போது பொரியலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை
பப்பாளிக்காய் – 1
வெங்காயம் 1,
பச்சை மிளகாய் – 3,
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
உளுந்து- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை :
1.    பப்பாளிக்காயின் தோலை சீவி, விதையை நீக்கிக் கொள்ளவும். இந்தக் காயினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பப்பாளிக் காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு, உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் பப்பாளிக்காய் பொரியல் ரெடி.

Leave a Comment