உருளைக்கிழங்கினைக் கொண்டு தயாரிக்கும் உணவு வகைகள் என்றால் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர், அந்த உருளைக் கிழங்கில் ரொம்பவும் டேஸ்ட்டியான ஒரு ரெசிப்பியைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
தேவையானவை:
உருளைக் கிழங்கு-3
பட்டாணி- 1/2கப்
வெங்காயம்- 3
தக்காளி-1
இஞ்சி- 1துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய்- 3
மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்
மிளகாய் தூள்- 1ஸ்பூன்
கடுகு – 1ஸ்பூன்
உளுந்து – 1ஸ்பூன்
கடலை பருப்பு – 1ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கொத்தமல்லி- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1.குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் தண்ணீர் சேர்த்து 4 விசில் சேர்த்து இறக்கவும்.
2.அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும்.
3. அடுத்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
3.அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.அடுத்து கலவையுடன் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் உருளைக் கிழங்கு- பட்டாணி கூட்டு ரெடி.