பன்னீரினை எந்த மாதிரியான ரெசிப்பிகள் செய்தாலும் குழந்தைகள் கட்டாயம் அதனை விரும்பி சாப்பிடுவர், அந்த பன்னீரில் இப்போது டேஸ்ட்டியான பன்னீர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பன்னீர் – கால் கிலோ,
வெங்காயம் – 3,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – 1½ டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை- தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு,
செய்முறை :
1. பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிக்கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் பன்னீர் பெப்பர் ப்ரை ரெடி.