பிஸிபேளாபாத் ரெசிப்பியை பொதுவாக அனைவரும் ஹோட்டலிலேயே சூப்பராக இருக்கும் என்று நினைப்பர். அத்தகைய பிஸிபேளாபாத் ரெசிப்பியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 3,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கொப்பரை துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
நெய் – 2 டீஸ்பூன்.
புளி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியையும் பருப்பையும் குக்கரில் போட்டு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 3 விசில் வேகவிடவும்.
2. அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம் என அனைத்தையும் வறுத்து அரைக்கவும்,
4. அடுத்து தேங்காயையும் லேசாக அரைக்கவும். புளியை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. அடுத்து புளிக்கரைசல், நெய், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
6. அடுத்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறுதியில் நெய் சேர்த்து இறக்கினால் பிஸிபேளாபாத் ரெடி.