15 நிமிடத்தில் ஒரு டிபன் செய்ய நினைத்தால், நீங்கள் ரொம்பவும் எளிதில் செய்யக்கூடிய தயிர் சேமியாவை செய்து சாப்பிடலாம், இப்போது அந்த தயிர் சேமியாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சேமியா – அரை கப்,
தயிர் – 2 ஸ்பூன்,
பால் – அரை கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
கொத்த மல்லித்தழை – கைப்பிடியளவு
துருவிய கேரட் – 2 ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 5,
உலர் திராட்சை – 5,
துருவிய இஞ்சி – கால் ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. சேமியாவை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதில் உள்ள நீரை வடித்து எடுத்து தட்டில் வைக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
4. அடுத்து முந்திரி, உலர்திராட்சை, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமியாவினை சேர்க்கவும்.
5. அடுத்து தயிர், பால், உப்பு, கொத்த மல்லித்தழை, துருவிய காரட் கொண்டு கிளறி இறக்கினால் தயிர் சேமியா ரெடி.