பொதுவாக நாம் வெங்காயத்திலேயே பக்கோடா செய்து சாப்பிடலாம், அந்த வகையில் இப்போது வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெண்டைக்காய் – 10
அரிசி மாவு – 1 ஸ்பூன்
சோள மாவு – 1 ஸ்பூன்
கடலை மாவு – அரை கப்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள்- 1 ஸ்பூன்,
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு- சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு
ரொட்டித்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை :
1. வெண்டைக்காயைக் கழுவி துடைத்து நன்கு வெட்டிக்கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள், வெண்டைக்காய் லேசாக தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து இந்த கலவையை நன்கு ஊற விடவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெயில் போட்டு பொரித்தால் வெண்டைக்காய் பக்கோடா ரெடி.