சிக்கனில் நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது சிக்கன் கீமா பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
வெங்காயம் – 2
இஞ்சி- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் போட்டுக் கழுவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
3. அடுத்து சிக்கனுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு உதிர்க்கச் செய்யவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
5. அடுத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து சிக்கனை போட்டு வதக்கவும்.
6. இப்போது டேஸ்ட்டியான சிக்கன் கீமா பொடிமாஸ் ரெடி.