சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காயினைவிட சிறந்த மருந்து எதுவும் இருக்கப் போவதில்லை, இந்த பாகற்காயினை தினசரி என்ற அளவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துவந்தால் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இப்போது பாகற்காயில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 4 பெரியது
வெந்தயம் – 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வினிகர் – 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. பாகற்காயை நறுக்கி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து பாகற்காயுடன் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் கசப்புத் தன்மை குறையும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பெருங்காய தூள், வெந்தயத் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
4. அடுத்து பாகற்காய் மற்றும் வினிகர் ஊற்றி வதக்கி இறக்கினால் பாகற்காய் ஊறுகாய் ரெடி.