வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகள் மற்ற சிப்ஸ் வகைகளைக் காட்டிலும் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவர். இப்போது நாம் வாழைக்காயில் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
வாழைக்காய் – 3
மிளகு – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வாழைக்காயின் மேல்தோலை சீவி வட்டமாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் ஊற விடவும்.
2. மிளகை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து லேசாக வெயிலில் உலர்த்தி மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
5. உப்பு தூவி சாப்பிட்டால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.