பள்ளிகளிலிருந்து வரும் குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகளை கொடுப்பதைவிட, வீட்டிலேயே செய்த உணவுகளை கொடுப்பது சிறந்துது.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில்விட்டு பொரிக்கவும். இருபுறமும் சிவக்கவிட்டு பொறித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி, தக்காளி சாஸுடன் பர்மாறலாம்..