இப்படி பூரி செய்தால் எண்ணெயில் வெந்த பூரியும் ஆரோக்கியமாகும்…

By Staff

Published:

மைதா சேர்ப்பதாலும், எண்ணெயில் வெந்ததாலும் பூரி ஆரோக்கியமானதில்லைன்னு சொல்வாங்க. ஆனா, அதே பூரியை பாலில் போட்டு சாப்பிட்டால் பாலின் சத்துக்களும், பூரியின் ருசியும் சேர்ந்து நல்லதொரு சிற்றுண்டி நமக்கு கிடைக்கும்.

f052e6e05b3dc5acd267b45d59c50004

பூரி செய்ய தேவையான பொருட்கள்

மைதா – 1/2 கப்
ரவை – 1/2 டீஸ்பூன்
நெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – பொறிப்பதற்கு ஏற்ப

பால் செய்வதற்கு

பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி – கை அளவு
குங்குமப் பூ – கொஞ்சம் (இருந்தால்)

2bf17c988ebbbc39f5fef8025c68ecb0

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு மாவினை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் சேர்க்கவும். பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஊற வைத்த மாவை சிறிது எடுத்துக்கொண்டு பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள். அதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும்.

இந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும். இறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்து அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும்.

சுவையான பால் பூரி அல்லது பால் போளி ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். கடவுளுக்கும் நைவேத்தியம் செய்யலாம்.

Leave a Comment